தினகரன் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்! - ஆவணங்கள் பறிமுதல்

புதுச்சேரி அருகே டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட சீலை அகற்றிவிட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல்செய்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ணை வீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிடிவி தினகரனுக்கு சொந்தமான இடங்கள், அவருடைய உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி அருகே உள்ள  அரோவில்லில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் 8 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி ஒரு அறைக்கு மட்டும் சீல் வைத்துவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் அந்த வீட்டிற்கு இன்று காலை 3 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர்  மீண்டும் வந்துள்ளனர். அப்போது அந்த பண்ணை வீட்டில் பணிபுரியும் ஊழியர் முத்துவின் முன்பு  சீலை அகற்றிட்டு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.  இந்த சோதனையின் காரணமாக டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!