வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (07/01/2018)

கடைசி தொடர்பு:14:35 (07/01/2018)

மார்ச் 24, 25-ல் தி.மு.க மாநாடு..! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் மாநாடு நடைபெறும் என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தீர்மானங்கள்: 

  • 2ஜி வழக்கில் சோதனைகளைக் கடந்து வழக்கிலிருந்து விடுதலையான ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு
  • போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னைகளை முதல்வர் தலையிட்டு பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 
  • மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் மேற்கொள்ளும் ஆய்வைத் தடுத்த நிறுத்தவேண்டும். 
  • முத்தலாக் தடைச்சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவேண்டும். 
  • தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் ஆகிய மசோதாக்களை மறு ஆய்வு செய்யவேண்டும். 
  • ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை அளிக்கவேண்டும். 
  • நிபுணர் குழுவை உடனடியாக அமைத்து மாநில நிதிநிலைமை குறித்து உடனடியாக ஆய்வு நடத்தவேண்டும்.  
  • விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். 
  • மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மார்ச் மாதம் 24, 25-ம் தேதிகளில் ஈரோட்டில் தி.மு.க மாநாடு நடத்தப்படும்.