பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேலுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

சேலம் மாவட்டத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழத்துக்கு துணைவேந்தராக பேராசிரியர் குழந்தைவேல் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தராகவுள்ள குழந்தைவேலுக்கு இருக்கும் சவால்கள் குறித்து காண்போம். 

குழந்தைவேலுக்கு பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சவால்கள்: 

கடந்த காலத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்தது, லீன் வேக்கன்ஸி ஆசிரியர்களை நிரப்பியது, பொதுப்பணித்துறை அனுமதி இல்லாமல் தனியார் ஒப்பந்தம் மூலம் கட்டிடம் கட்டியது. தேர்வு விடைத்தாள் வாங்கியதில் முறைகேடுகள். கல்வி நிலை தகுதி ஊதியம் வழங்கியதில் முறைகேடு, உறுப்பு கல்லூரி பணியாளர்களை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வைத்தது. குற்றப்பின்னணி உள்ளவரை டீனாக நியமித்தது, மாணவர்களே இல்லாத துறைக்கு ஆசிரியர்களை நியமித்தது,

கோப்புகள் காணாமல் போனதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சுமூகமாக முடிப்பது, தேர்வு முடிவுகளை வெளியிட தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கி பல கோடி இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு காரணமானவர்களை காவல்துறையிடம் புகார் கொடுப்பது, பல ஆண்டுகளாக ஒரே துறையின் இருப்பவர்களின் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பது,

கந்து வட்டிக்கு விடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பர்னிச்சர் மற்றும் கம்யூட்டர்களை தமிழக அரசு நிறுவனங்களான டான்ஸி மற்றும் எல்காட் நிறுவனத்திடம் வாங்காமல் ஈரோட்டில் உள்ள தனியாரிடம் வாங்கியதில் நடைப்பெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, தொலைத்தூர கல்வி முறைகேடுகளைத் தடுத்தல், முன்னாள் துணைவேந்தர் சாமிநாதனின் ஏஜெண்டாக இருந்த துணை தேர்வுக் கட்டுப்பட்டு அலுவலர் செந்தில்வேல் முருகன் தனியார் படிப்பு மையத்தில் இருந்து வாங்கிய பல கோடிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது,

பல்கலைக்கழக வழக்குகளை அரசு வழக்கறிஞர்கள் மூலம் எதிர் கொள்ளாமல் தனியார் வழக்கறிஞர்களான ஐசக் மோகன்லால் மற்றும் காட்சன் சாமிநாதன் போன்றவர்கள் மூலம் நடத்தி பல்கலைகழகத்திற்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு வழக்கறிஞர்களை பயன்படுத்திக் கொள்ளுவது' உட்பட ஏராளமான சவால்கள் இவர் முன்பு காத்திருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!