வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (07/01/2018)

கடைசி தொடர்பு:14:13 (07/01/2018)

'உயரதிகாரிங்க தொல்லை தாங்க முடியல!’ - மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் ஆய்வாளர் கண்ணீர்

உயர் அதிகாரி கொடுத்த அழுத்ததால் தற்கொலை முடிவெடுத்ததாக சென்னையில் பணிபுரியும் கிரைம் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி தெரிவித்துள்ளார். 

போலீஸ்
 

இன்று அதிகாலை 3 மணியளவில் காவல் ஆய்வாளர் ராஜி தன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். 'என் கடைசி வார்த்தைகள்’ என்று கூறி அனுப்பியிருந்த அந்த ஆடியோவில் ‘எதற்கு இந்த வாழ்க்கை. வீட்டிலும் நிம்மதியில்லை. பணியிலும் நிம்மதியில்லை. பணிச்சுமை அதிகம். உயரதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.  கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகள் மத்தியில் நாங்கள் தவித்து வருகிறோம். பணிச்சுமையால் என் வீட்டாரோடு பேசி மூன்று நாள்கள் ஆகிறது. இதை சொல்லவே நடுங்குகிறது. என் பிள்ளைகளை விட்டு நான் சாக போகிறேன்” என்று தழுதழுத்த குரலில் பேசியுள்ளார். தன் தங்கையிடம் பிள்ளைகளை கவனித்துக் கொள் என்றும் கூறியிருக்கிறார்.

வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட இந்த ஆடியோவை கேட்டதும் ஆய்வாளர் ராஜியின் அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினோம்.. "நான் ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல சார். நான் அப்பறம் பேசுறேன் சார்” என்று சொல்லி கட் செய்துவிட்டார்கள். ராஜியின்  நண்பர்கள் அவரை தற்கொலை செய்து கொள்ளாமல் காப்பாற்றிவிட்டது பின்னர் தெரியவந்தது. 

இதுபற்றி ராஜியின் சகோதரியிடம் பேசிய போது... " இப்போ பரவாயில்ல, நல்லா இருக்காங்க... நானும் அக்காவும்(ஆய்வாளர் ராஜி) கமிஷ்னர் அலுவலகம் போய்கிட்டு இருக்கோம்.' என்றார்.