சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது! - மதுரையில் எழும் புகார்

மதுரையில் சாலைகளில் பல இடங்கள் குண்டும் குழியாகவும் காட்சி காட்சியளிக்கிறது. இதனால் அவசர வாகனங்களான 108 ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாமல் பல சிரமங்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது. மேலும் சாலைகள் சேதம் அடைந்து இருப்பதால் அதிக அளவு தூசி ஏற்பட்டு போக்குவரத்து பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாநகர் கிழக்கு மாவட்டம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் க.அசோக்குமார், 'மதுரையில் அவசர வாகனத்திற்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர  வாகனங்கள் வழிகொடுத்தாலும் சாலைகள் வழிகொடுப்பதில்லை.

சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அவசர வாகனம் விரைவாக செல்ல முடிவதில்லை. கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு இராஜாஜி மருத்துவமனையை நம்பி இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக கொண்டுவரப்படுகின்றனர். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் வழிகொடுத்தாலும் சாலையில் காணப்படும் பள்ளங்களும், குழிகளும் வழிகொடுப்பதில்லை.

இது போன்று மதுரையில் அவசர வாகனங்கள் செல்ல கூடிய பிரதான சாலைகள் நிறையவே பள்ளங்களாகவே காட்சியளிக்கின்றன. இவ்வழிகளிலேயே 108 வாகனங்கள் செல்கின்றன. இவ்வாறாக காணப்படும் சாலைகளை உடனடியாக செப்பணிடவேண்டும். சாலை பயணிகளுக்காக செய்யாவிடினும் இது போன்று அவசரவாகனத்தில் செல்லும் உயிரை காக்கவேண்டியாவது செய்யலாமே என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!