வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (07/01/2018)

கடைசி தொடர்பு:15:41 (07/01/2018)

 'இந்தியாவில் 32 மாநிலங்கள்!' - உசிலம்பட்டி எம்.எல்.ஏ சொன்ன புதுகணக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியின் 72வது ஆண்டுவிழா நடைபெற்றது.


 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அ.தி.மு.க.,வின் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., நீதிபதி பேசும் போது இந்தியாவில் வறுமையை ஒழிக்க வேண்டும் பசியை போக்க வேண்டும், தமிழகம் கல்வியில் முதலிடத்திற்கு வர வேண்டும் என்ற சீரிய சிந்தனையுடன் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா செயல்பட்டார். அம்மா அவர்கள் சீரிய சிந்தனையுடன் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் 32 முதல்வர்கள் ஆண்டாலும் எந்த முதல்வரும் செய்திடாத வகையில் பலநூறு கோடி ரூபாயை மாணவ செல்வங்களின் கல்விக்காக அர்ப்பணித்துள்ளார் " என்றார் .

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவில் 32 மாநிலங்கள் உள்ளது என கூறியது மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் வியப்பை ஏற்படுத்தியது . நம்ம தொகுதி எம்.எல்.ஏ புதுக்கணக்கை சொல்கிறாரே என அங்கிருந்த மக்கள் சிந்தனையிலிருந்தவாறே சிரிக்கத் தொடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ  நீதிபதி அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம் "அந்த விழாவில் கலந்துகொண்டது உண்மை தான் ஆனால்  இந்தியாவில் 29 மாநிலங்கள் 7 யூனியன்கள் உள்ளது என்று சரியாக தான் பேசிய ஞாபகம் உண்டு . அப்படி தவறாக பதட்டத்தில் பேசி இருப்பேன் மன்னிக்கவும்" என்றார் .