’மக்களோடு மஹாலஷ்மி!’ - மதுரையை மிரளவிட்ட பி.ஜே.பி. மகளிரணித் தலைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மக்கள் நாயகி, ஜான்சிராணி, என்ற வாசகங்களுடன் மதுரையில் காணும் இடமெல்லாம் விதவிதமான  போஸ்களில் போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருக்கிறார் மஹாலட்சுமி. அவருடைய பெயருக்குப் பின்னால் ஆறுக்கும் மேற்பட்ட கல்வித்தகுதிகளைப் பார்த்தாலே யாருக்கும் மிரட்சி ஏற்படும். பி.ஜே.பி.யின் மாநில மகளிரணித் தலைவியான இவர், தன்னுடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் பிரமாண்டமாகக் கொண்டாடி வருகிறார். இந்தாண்டு டெம்போ அதிகரித்துள்ளது.

பிஜேபி


காமராஜர் சாலையிலுள்ள மண்டபத்தில் மக்களைத் திரட்டி வைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவை செம கலக்கலாக கொண்டாடினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி மக்களைத் திரட்டி அவர்களுக்கு முன் மஹாலட்சுமியின் அருமை பெருமைகளை சிலர் பேசினார்கள். அவர் குடும்பத்தில் நடந்த சுபநிகழ்ச்சிகளின் வீடியோ மக்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அவருக்கு ஆளுயர மாலை, கிரீடம் அணிவித்து வீரவாள் வழங்கப்பட்டது. தன் செலவிலயே தனக்கு இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்தவர், அப்படியே மக்களுக்கும் தையல் மெஷின், காதொலிக் கருவி என நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வாழ்த்துப் பெற்றார். இந்த நிகழ்ச்சியை அவருடைய டிரஸ்ட் மூலம் நடத்துவதாக சொல்லப்பட்டாலும், பி.ஜே.பி. கொடிகள், மோடி, பொன்.ராதாகிருஷ்ணன் படங்களை அனைத்து இடங்களிலும் வைத்து கட்சி விழாவாகத்தான் நடத்தினார்கள். பி.ஜே.பி.யில் முக்கிய நிர்வாகிகள் தங்களின் தனிப்பட்ட விழாக்களை சத்தமில்லாமல் நடத்தி வரும்போது, மகளிரணித் தலைவரான இவர், பிரமாண்டமாக பிறந்தநாள் விழாவை நடத்தி மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறார் என்று பி.ஜே.பி.யினர் சிலர் புலம்பித் தள்ளுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!