’’ரஜினி ஈடுபடத் தொடங்கியதும் அரசியல் சுத்தமாகும்!’’ - ரசிகர்கள் விருந்தில் ராகவா லாரன்ஸ் பன்ச்

ரஜினி ஈடுபடத் தொடங்கியதும் அரசியல் சுத்தமாகும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். 

கிடா விருந்து

அரசியல் அறிவிப்புக்கு முன் கடந்த மாதம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது மதுரை ரசிகர்களிடம், 'மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை. ஆனால், இந்த மண்டபத்தில் போட வாய்ப்பில்லை, ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன்' என்று பேசி குஷிப்படுத்தினார்.

’’எங்கள் சூப்பர் ஸ்டார்  சொன்னதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்'' என்று முடிவு செய்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள், அதை இன்று நிறைவேற்றிக் காட்டினார்கள். மதுரை அழகர் கோயில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள், பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்து முப்பெரும் விழாவை நடத்தி அசத்தினார்கள். பொது இடத்தில் கிடாக்களை மொத்தமாக வெட்டுவதை தவிர்க்கவும் என்று, பீட்டா கேட்டுக்கொண்டதால், வெளியிலிருந்து  கறி சமைத்து எடுத்துவந்து விருந்து வைத்தார்கள். இந்த விழாவை தொடங்கி வைக்க வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், "ரஜினி தொடங்கியுள்ள ஆன்மிக அரசியலில், நான் அவரின் காவலனாக இருப்பேன். நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பது தேர்தலுக்குப் பின்பு தெரியும். ரஜினி ஈடுபடத் தொடங்கியதும் அரசியல் சுத்தமாகும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!