இணையதளம் மூலம் 8 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி..!

கோவையில், இணையதள திருமணத் தகவல் மையம் மூலமாக, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆணிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவரை இழந்த இவர், தனியார் இணையதள திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார். இந்நிலையில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இதையடுத்து, குமுதவள்ளிக்கும், புருஷோத்தமனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின்னரே, புருஷோத்தமன் ஏற்கெனவே பலமுறை திருமணமானவர் என்று குமுதவள்ளிக்குத் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், புருஷோத்தமனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

புருஷோத்தமனுக்கு ஏற்கெனவே திருமணமாகி, கல்லூரி  படிக்கும் வயதில் ஒரு மகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், தனக்குத் திருமணமானதை மறைத்து, அவர் குமுதவள்ளியைத் திருமணம் செய்துள்ளார். இதற்கு, இணையதள திருமண தகவல் மையம் நடத்திவரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இதே பாணியில் இவர் 8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!