திமுக எம்.பி. ரித்தீஷ் மீது ரூ.20 கோடி நிலமோசடி புகார்!

சென்னை:  திமுக எம்.பி.யும்,நடிகருமான ரித்தீஷ் மீது காவல்துறையில், ரூ.20  கோடி நிலமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை ஆர்.கே.சாலையில் வசித்து வருபவர் ராஜசேகர்.தொழில் அதிபரான இவர்  சென்னையில் பிரபலமான ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ராஜசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று  அளித்துள்ள புகாரில்,"கடந்த 2006-ம் ஆண்டு எனது தந்தை முருகேசனிடம் ரித்தீஷ்  எம்.பி. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.20 கோடி  வாங்கினார். ஆனால் தான் கூறியபடி ரித்தீஷ் நிலத்தை வாங்கி தரவில்லை.

இதற்கிடையே எனது தந்தை இறந்து விட்டார்.அதன்பிறகு நான் சென்று அவரிடம் பணம்  கேட்டேன்.அப்போது வேறு இடத்தில் இடம் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.  ஆனால் இதுவரையில் இடம் வாங்கி தரவில்லை.எனவே நாங்கள் இழந்த பணத்தை மீட்டு  தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!