வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (08/01/2018)

கடைசி தொடர்பு:11:20 (08/01/2018)

சட்டப்பேரவையில் தனி ஒருவராக அமர்ந்திருக்கும் தினகரன்!

தலைமைச் செயலகத்தில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய சட்டப்பேரவையில், இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பின், டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், தமிழக ஆளுநராகப் பதவியேற்றப்பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது. 

தினகரன்
 

தினகரன் சட்டப்பேரவைக்கு வந்தபோது, வெளியே அவரது தொண்டர்கள் ’வருங்கால முதல்வர், நாளைமுதல்வர் வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினர். தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவைக் காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தனியாக  நான்காம் கேட் வழியாக தினகரன் உள்ளே சென்றார். 

தினகரன்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படாததால், எதிர்க்கட்சி வரிசையில் தினகரன் தனி ஒருவராக அமர்ந்திருந்தார். எம்.எல்.ஏக்களின் சீட் காலியாக இருந்தது. 

அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ., கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து தினகரனை அமர வைத்தனர். தி.மு.க-வை சேர்ந்த நேரு, தினகரனுக்கு வாழ்த்து கூறினார். தினகரன், 148-வது சீட்டில் அமர்ந்துகொண்டார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க