16-ம் தேதி ஜல்லிக்கட்டு! - அலங்காநல்லூரில் ஏற்பாடுகள் ஜரூர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காகப்  பந்தக்கால் நடும் விழா, இன்று காலை ஊர்க்காரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,  முன்னிலையில் கலெக்டர் கலந்துகொள்ள,  சிறப்பாக நடந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை எதிர்த்து  தமிழகம் முழுவதிலுமிருந்து திரண்டுவந்த மாணவர்கள், இளைஞர்களால்  அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் அலங்காநல்லூருக்கு வருகைதந்து, போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வெளிநாடுகளிலும் போராட்டம் நடந்தது.  அதற்குப்பின், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தடியடி, கலவரம், விசாரணைக்கமிஷன் என நீண்டது தனிக்கதை. அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், அலங்காநல்லூரில் ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு திரும்பிச்சென்றார்.

அலங்காநல்லூர்


அதன்பிறகு,  பொதுமக்கள்  மகிழ்ச்சியின்றியே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த வருடம், அதுபோன்ற நெருக்கடிகள் ஏதுமில்லாததால், மிகவும் மகிழ்ச்சியுடன் பந்தக்கால் நடும் விழா இன்று காலை முனியாண்டி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து நடத்தப்பட்டது. இதில், மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கலந்துகொண்டார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரும் 16-ம் தேதி நடைபெறும் விழாவுக்கு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் அலங்காநல்லூர் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!