`அவதூறாகப் பேசினாரா?' எம்.எல்.ஏ வீட்டுக்கு படையெடுத்த இளைஞர்கள்

தினகரன் ஆதரவாளரான தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள  பரமக்குடி  எம்.எல்.ஏ முத்தையா வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 23 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர் .

பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ முத்தையா வீடு முற்றுகை
 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ முத்தையா, மதுரை விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து கலவரத்தை தூண்டும் வகையில் , தமிழக அரசு, முதல்வர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதாகத் தொலைபேசி உரையாடல் பல்வேறு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவி வருகிறது.

இந்நிலையில், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ முத்தையாவை கண்டித்தும் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் பரமக்குடி புரட்சி போராளி நேதாஜி பேரவையைச் சேர்ந்தவர்கள்  முத்தையா வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த பரமக்குடி போலீஸார் ஆர்ப்பாட்டம் செய்த 23 இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!