பசுபதி பாண்டியன் நினைவுதினத்தால் 144 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர்!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.  

Vengadesh - collectorஇது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியில் வரும் 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவுதினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக  நடைபெறும் வகையிலும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்திடும் வகையிலும் வரும் 9ம் தேதி மாலை 6 மணிமுதல் 11ம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இக் காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்திலும்,  பிற பகுதியிலிருந்தும் இந்த நினைவுதின நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் மற்றும் பொதுமக்கள் ஐந்திற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருதல், ஊர்வலம் நடத்துதல், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாயக் கொடிகள் கொண்டு வருவதற்கும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக இந்நிகழ்வில் பொதுமக்களை அழைத்து வரவும், அன்னதானம் வழங்கவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. " எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!