போக்குவரத்துத் துறையின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு இதுதான் காரணம்! - கிருஷ்ணசாமி பளீச்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை ஒரே கட்டமாக வழங்கிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு வந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்துக்குப் புதிய தமிழகம் கட்சி முழு ஆதரவு தருவதுடன், பட்டாசு உற்பத்தியாளர்கள் வரும் 10-ம் தேதி நடத்தும் போராட்டத்திலும் கலந்துகொள்ளும்.

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதே போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேட்டுக்கு காரணம். நிலுவைத் தொகையை ஒரே கட்டமாக வழங்கிட வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான  போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது, முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னையைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இதற்கெல்லாம் காரணமான 50 ஆண்டு காலம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலிருந்து மாற்றம் வர வேண்டும் எனத் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் பேச்சைக் குறைத்து ஆட்சி செயல்பாடுகளில் முனைப்பு காட்ட வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!