`ஹலோ மிஸ்டர் தெர்மாகோல்!’ - செல்லூர் ராஜுவை ராக்கிங் செய்த தினகரன் ஆதரவாளர்கள்

பல்வேறு அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது.

dinakaran
 

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க கட்சியும் இரட்டை இலைச் சின்னமும் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற முடியவில்லை என்ற வருத்தம் இவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராகத் தொண்டர்கள் புடைசூழ சட்டப்பேரவைக்குத் தினகரன் வருகை தந்தது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கும் அமைச்சர்களுக்கும் எரிச்சலூட்டியது என்கிறது கட்சி வட்டாரம். இதனிடையே சட்டப்பேரவைக்கு கடைசி ஆளாக வந்த செல்லூர் ராஜுவை வம்புக்கு இழுத்து எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வினரை மேலும் எரிச்சலூட்டியிருக்கின்றனர் தினகரனின் தொண்டர்கள்.  

sellur raju
 

இன்று காலை தினகரன் சட்டப்பேரவைக்கு வந்தபோது, அவருடன் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவை நுழைவு வாயிலிலேயே நின்று கொண்டனர்.

அப்போது கடைசி ஆளாகச் சட்டப்பேரவைக்கு வந்த செல்லூர் ராஜூவை வெளியே நின்றுகொண்டிருந்த தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்கள் "ஹலோ மிஸ்டர் தெர்மாகோல்” என்று அழைத்துக் கிண்டல் செய்துள்ளனர். இவர்கள் கத்திக்கொண்டிருந்ததைப் பெரிதாகப் பொருட்படுத்தாத செல்லூர் ராஜு சட்டைக் கையை மடித்தபடி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இதனால், அங்கு சலசலப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!