’’அதிகக் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை!’’ - தவிக்கும் மாணவர்கள்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களில் அதிகக் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 சதவிகித அரசுப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 பணிமனைகளில் உள்ள 740 பேருந்துகளில், தற்போது 370 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தினக் கூலி அடிப்படையிலான ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். விடுமுறை முடிந்து, இன்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் ,சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை பள்ளி மாணவர்கள், அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம்

இதனால் ஆட்டோவிற்கு அதிகக் கட்டணம் கொடுத்து பள்ளிக்குச் செல்ல வேண்டியு நிலை உள்ளது. ஆட்டோக்களும் அதிகக் கட்டணம் வசூலிப்பதால், நிறைய மாணவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இயக்கப்படும் ஒருசில பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்தநிலையில் பள்ளி முடிந்ததும் பேருந்துகள் வராத காரணத்தால் கிராமப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டிற்கு செல்ல காலதாமதம் ஆகிறது. இது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!