வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (08/01/2018)

கடைசி தொடர்பு:15:36 (09/01/2018)

உதயநிதி - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள `நிமிர்' படத்தின் ட்ரெய்லர்!

இயக்குநர் ப்ரியதர்ஷன் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியுள்ள நிமிர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பஹத் பாசில் நடித்த ’மகேஷிண்டே பிரதிகாரம்’ மலையாளப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக நிமிர் படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள நிமிர் படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். உதயநிதியுடன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம். எஸ்.பாஸ்கர், கருணாகரன், கஞ்சா கருப்பு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிமிர் படம், தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. சமுத்திரக்கனி வசனங்கள் எழுத, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற நிமிர் படம் ஜனவரி 26-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மோகன்லாலும் ப்ரியதர்ஷனும் மலையாளத் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பதனால், இப்படத்தின் தலைப்பை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க