’’சர்வதேசப் போட்டிகளுக்குத் தகுதி!’’ - பேட்மின்டனில் அசத்தும் மதுரை மாற்றுத்திறனாளி மாணவி

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

இறகு பந்து

காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான ஜெர்லின் அனிகா, மாநில மற்றும் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். 9-ம் வகுப்புப் பயின்று வரும் ஜெர்லின் அனிகா, பலமுறை பொதுப்பிரிவுகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றெடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் ஜெர்னில் அனிகாவை, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அழைத்துப் பாராட்டினார். 

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெகத்ரட்சகனிடம் பேசினோம். "கடந்தாண்டு ஜூலை மாதம் 18-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை துருக்கியில் நடைபெற்ற வாய்பேச முடியாத, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின் பேட்மின்டன் போட்டியில் ஜெர்லின் கலந்துகொண்டார். அந்தத் தொடரில் உலகளவில் 5-ம் இடத்தை அவர் பிடித்தார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்தார். இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜூனியர் ஒலிம்பிக்கிலும் ஜெர்லின் அனிகா பங்கேற்க இருக்கிறார். தற்போதைய போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவிகளை ஃபென்னர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு போட்டிகளில் பங்கேற்க ஜெர்லினுக்கு உதவ வேண்டும்’ என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!