"போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்றது" - திருமாவளவன்

திருமாவளவன், thirumavalavan

ராட்டியத்தில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியபோது, “ஒகி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்காமல், மத்திய அரசு வழங்கிய சொற்ப தொகைக்காக நன்றி தெரிவிக்கும் மாநில அரசின் செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மீனவர்களைத் தேடும் பணியில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. அதனால், மீனவர்களே களம் இறங்கித் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையில் பலன் எட்டப்படாத நிலையில், அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராடும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது முறையற்றது. அவர்களது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். விதிகளை மீறி மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து வரும் ஆளுநரின் போக்கை, அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இந்தச் சூழலில் ஆளுநரின் உரையை எதிர்த்து சட்டமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவரும் எதிர்க்கட்சியின் செயலை வரவேற்கிறேன்.

thirumavalavan, திருமாவளவன்

மராட்டியத்தில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட சாதி வெறியாட்டத்துக்குக் காரணமாக இருந்து வரும் இந்துத்துவ அமைப்பையும் அதற்கு துணை நிற்கும் பா.ஜ.க. அரசையும் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்புலமாக ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!