வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:28 (09/01/2018)

திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாளில் 202 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 202 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் இராசாமணி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்திருச்சி, சிந்தாமணி, அண்ணாசிலை அருகில், தன் கணவர் இறந்த பிறகு அவர் நடத்தி வந்த சலூன் கடையை அவரது மனைவி பெட்ரிசியாமேரி தொடர்ந்து நடத்திவருகிறார். அவர் தொழில் மேம்பாட்டுக்காக கடனுதவி  கோரி விண்ணப்பித்திருந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட கலெக்டர் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் ரூபாய் 95 ஆயிரத்துக்கான கடனுதவி வழங்கினார்.

மேலும்,   தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 30 நபர்களுக்கு தலா ரூபாய் 5500 மதிப்புள்ள தையல் இயந்திரம், 20 மனவளர்ச்சி குன்றியோர்க்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களுக்கு மருத்துவ உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 21 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு ரூ.44 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி, 1 நபரின் குடும்பத்துக்கு இயற்கை மரண நிதியுதவியாக ரூபாய் 22 ஆயிரத்து 500 நிதியுதவி, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருச்சி (கிழக்கு), திருச்சி (மேற்கு) முசிறி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 63 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, 39 நபர்களுக்கு விதவை உதவித்தொகை, 16 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 2 நபர்களுக்கு கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித்தொகை, என மொத்தம் 202 நபர்களுக்கு ரூபாய் 8 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகள் தொடர்பான மொத்தம் 489 மனுக்கள் பெறப்பட்டது என்றும் மாவட்ட கலெக்டர் இம்மனுக்கள்மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க