திருப்பூரில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தற்போதுள்ள சொத்து வரி நிர்ணயித்தை, வரி சீராய்வு செய்வதாகக் கூறி, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை அளவீடு செய்த மாநகராட்சி நிர்வாகம், வரித்தொகையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

எனவே இதனைக் கண்டித்து இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்
முன்பாக ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், "இதுவரையிலும் செலுத்தப்பட்டு வந்த வரித்தொகைக்கே மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தராமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது.
இப்படியான சூழலில், வரித்தொகையை மேலும் உயர்த்தியிருப்பது பொதுமக்களை அதிகப்படியான
சிரமத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எனவே இந்த வரி உயர்வு முடிவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக
கைவிட வேண்டும் என்றுகூறி கண்டன முழக்கமிட்டனர். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்ற அக்கட்சியினர், அதிகாரிகளிடம் வரி உயர்வு தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் இந்த வரி உயர்வு முடிவை கைவிடாவிட்டால், அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!