வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:09:50 (09/01/2018)

கேள்விகேட்ட பிரதமர் மோடியின் சகோதரர்... காலில் விழுந்த பக்தர்கள்!

   

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள  கற்பகவிநாயகர் ஆலையத்திற்குச் சென்று விநாயகரை தனது நண்பர்களுடன் தரிசனம்செய்தார், பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி.  

திருச்சியிலிருந்து காரில் வந்த அவர்கள், பிள்ளையார் கோயிலில் உள்ள 'கோ' மடத்திற்குச் சென்று பசுக்களுக்கு உணவு வழங்கியதோடு, பசுக்களைத் தொட்டு வணங்கினார். அங்கிருந்து கற்பகவிநாயகர் இருக்கும் இடத்திற்குச் சென்று,  சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது, பி.ஜே.பி-யினரால் அவர்களுக்கு மாலை மரியாதைசெய்யப்பட்டது. கோயில் உள் பிராகாரத்தில் உள்ள பாஸ்போர்ட்விநாயகர், கல்யாண வரம் தரும் கார்த்தியாயினி, இரண்டு ராஜகோபுரம்கொண்ட கோயில் என கோயிலின் பெருமைகளை அறங்காவலர்கள் கூறினார்கள். அதன்பிறகு வெளியே வந்தவர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பெண்கள் மாலையணிந்து சிவப்பு நிற சேலை கட்டி கூட்டமாக வந்ததைப் பார்த்து,  இது என்ன கூட்டம் எனக் கேட்டார் பிரகலாத். அதற்கான விளக்கத்தைச் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அப்போது, பெண்கள் அவருக்கு கை கொடுத்ததோடு நிற்காமல், அவர் காலில் படபடவென விழுந்து வணங்கவும் தவறவில்லை. அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே காரில் ஏறி ராமேஸ்வரம் சென்றார் பிரகலாத். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க