கருணாநிதியை நேரில் சந்தித்த பின்னர் நெகிழ்ந்த வைகோ!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் மு.கருணாநிதியை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது அவருடன், தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். சந்திப்பின்போது, கருணாநிதியின் உடல்நலம்குறித்து வைகோ விசாரித்தார். 

கருணாநிதியைச் சந்தித்த வைகோ

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் கலைஞர் அவர்களைப் பார்த்தேன். நலமாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கபலமாக, உறுதுணையாகச் செயல்படுவது என்று எங்கள் இயக்கம் ஒருமனதாக முடிவுசெய்தது என்று நான் அவரிடம் கூறினேன். அண்ணன் கலைஞர் அவர்கள் கரத்தைப் பற்றிக்கொண்டேன். மனதை நெகிழச்செய்கிற உணர்ச்சிமயமான சந்திப்பாக எனக்கு அமைந்தது'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!