வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:12 (09/01/2018)

ஆட்டோ டிரைவர் ஓட்டிய பேருந்துக்கு ஏற்பட்ட நிலை!

ட்டோ டிரைவர் ஓட்டிச்சென்ற அரசுப் பேருந்து, மின்கம்பத்தின்மீது மோதியது. மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். 

விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், தற்காலிக ஊழியர்களைக்கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த டேனியல் என்பவரும் அரசுப் பேருந்து  ஓட்ட விண்ணப்பித்திருந்தார். இவர், அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர். பணிக்குத் தேர்வுசெய்யபபட்ட டேனியல், நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருநகருக்கு பேருந்தை ஓட்டிச்சென்றார்.

திருநகர் அருகே ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது, சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் வளைந்தது. நல்ல வேளையாக வயர்கள் அறுந்து பேருந்து மீது விழவில்லை. இதனால், பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். 

இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு இரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்தனர். மின்கம்பத்தைச் சரிசெய்ய இழப்பீடு தர வேண்டுமென மின்வாரியத்தினர் அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், தகராறு உருவாகும் சூழலைப் பார்த்த டேனியல் அங்கிருந்து ஓடிவிட்டார். 

தமிழக அரசு, அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடிவருவதாக போக்குவரத்து ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க