வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (09/01/2018)

கடைசி தொடர்பு:12:05 (09/01/2018)

ராஜாவுக்கு கல்தா கொடுத்த தீபா..! அதிரவைத்த திடீர் அறிவிப்பு

எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையிலிருந்து ஏ.வி.ராஜா அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளார். 

ஜெயலலிதாவின் மருமகளும் 'எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை'யின் பொதுச்செயலாளருமான தீபாவின் கார் டிரைவராகப் பணியாற்றிவர் ஏ.வி.ராஜா. ராஜாவுக்கு தீபா கட்சியில் அதிக முக்கியத்துவம் வழங்கிவந்தார். அதனால், தீபாவுக்கும் அவருடைய கணவர் மாதவனுக்குமி டையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில், ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும்  நீக்கியுள்ளார் தீபா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து கட்சிக்கு களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருவதால், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி உறுப்பினர்கள் யாரும் ராஜாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜா மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, தீபாவும் மாதவனும் ஒன்றிணைந்துள்ளனர்.