190 பிச்சைக்காரர்களை மீட்டெடுத்த குமாரபாளையம் இளைஞருக்கு தேசிய விருது!

குமாரபாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர், சமூக சேவைக்கான தேசிய இளைஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

naveen kumar
 

ஈரோடு மற்றும் நாமக்கல்லை மையமாகக்கொண்டு, பிச்சைக்காரர்கள் இல்லாத ஊராக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் நவீன்குமார். 'அட்சயம்' என்ற அமைப்பின் மூலமாக பிச்சைக்காரர்களை (யாசகர்களை) அந்நிலையிலிருந்து மீட்டுவருகிறார். இவரது சேவையைப் பாராட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சிறந்த சமூக சேவைக்கான விருதை வழங்க தேர்வு செய்துள்ளது. இந்த விருது, வரும் 12-ம் தேதி உத்தரப்பிரதேசம் அருகே உள்ள நொய்டாவில், தேசிய இளைஞர் திருவிழாவில் வழங்கப்பட உள்ளது. 

naveen kumar

 

நவீன்குமாரை சந்தித்துப் பேசினோம், "எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று. 2014ல் 'அட்சயம்' என்ற அமைப்பை என்னுடன் படித்த மாணவர்களைக்கொண்டு தொடங்கினோம். குமாரபாளையம், பவானி, ஈரோடு, சேலம்  ஆகிய  பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட், பார்க், இதர பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் (யாசகர்களை), எடுக்க வேண்டாம் என்று சொல்லி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம். அதிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களின் குடும்பத்துடனோ அல்லது ஹோமிலோ சேர்த்தோம். இதுவரை 190 பேரை மீட்டுள்ளோம். இதில், 40 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல், சேலம், ஈரோடு எனப் பல மாவட்டங்களில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, யாசகர்களை  மீட்டுவருகிறோம். அடுத்தகட்டமாக, 'யாசகர்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் லட்சியம்” என்றார்.

award

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!