விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேரில் ஆஜர்..!

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனர் நேரில் ஆஜராகியுள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். நேற்று ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவகுமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேரில் ஆஜராகியுள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பூங்குன்றன், ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தார். அவர், ஏற்கெனவே 2-ம் தேதி போயஸ்கார்டனில் பணியாற்றிய சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 15 பேர்குறித்த விவரத்தை விசாரணை ஆணையத்தில் அளித்திருந்தார். இந்தநிலையில், இன்று பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பூங்குன்றன் உடனிருந்தாரா? இல்லையா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது. நாளை, ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளராக இருந்த ஏ.டி.எஸ்.பி பெருமாள்சாமி ஆஜராகவுள்ளார். நாளை மறுநாள், மருத்துவர் பாலாஜி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!