வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:00 (09/01/2018)

விரைவில் இலவசப் பயணம்! - அதிகாரிகளை அதிர்ச்சியடையவைக்கும் வாசகம்

பொங்கலுக்கு இலவசப் பேருந்து இயக்கப்படும் என திருச்சி போக்குவரத்துக் கழகத்தில் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளதால், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
போக்குவரத்து தொழிலாளர்கள்
 
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 6-வது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தால், தமிழகத்தில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள திருச்சி புறநகர் போக்குவரத்துப் பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்புப் பலகையில், 'பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வெல்லம், விலையில்லா அரிசி, விலையில்லா கரும்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்குகிறது. அந்த வகையில் பொங்கலுக்கு இலவச பேருந்துப் பயணம் விரைவில்...” என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனில், பயணிகளிடம் பயணக்கட்டணம் வாங்காமல் இலவசமாகப் பேருந்தை இயக்கும் நூதன வகைப்  போராட்டங்களை  தொ.மு.ச தொழிற்சங்கம் முடிவுசெய்துள்ளது. இதனால், அரசுக்கு மேலும் பேரிழப்பு ஏற்படும் என்பதால், போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க