வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (09/01/2018)

கடைசி தொடர்பு:14:25 (09/01/2018)

கட்சி தொடக்கவிழாவை மதுரையில் நடத்த ரஜினி திட்டம்?

அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்துள்ள நிலையில், கட்சியின் பெயர், கொடியை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாகப் பெயர் மாற்றி, தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, கட்சி தொடக்க விழாவை, ஆன்மிக நகரமான மதுரையில் நடத்துவார் என்று தகவல் கிளம்பியுள்ளது. அரசியலில் நுழைவோர், மதுரையில் தொடக்க விழாவோ, முதல் மாநாடோ நடத்திய பின்புதான் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலில் வெற்றிபெற மதுரையில் நடத்தும் நிகழ்ச்சிகளே சென்டிமென்டாக உதவியுள்ளது.

மதுரையில்

இந்த நிலையில்தான் தன்னுடைய கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்த ரஜினி ஆலோசித்துவருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான சூழல்களை அறிந்து வர, ரஜினி மன்றத்தினர் சமீபத்தில் மதுரையில் நடத்திய முப்பெரும் விழாவில், ராகவா லாரன்ஸை கலந்துகொள்ள அனுப்பினார் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள். அந்த விழாவில் செய்யப்பட்ட பிரமாண்ட ஏற்பாட்டையும், கலந்துகொண்டவர்களின் உற்சாகத்தையும் பார்த்து, இங்குதான் தொடக்க விழாவை நடத்த வேண்டுமென்று ராகவா லாரன்ஸ் ரஜினியிடம் கூறியதாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு முதல் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் மதுரை என்பதால், இங்கேயே கட்சி தொடக்க விழாவை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்துவரும் ரசிகர்கள், உறுப்பினர் சேர்க்கையை வார்டு வாரியாக நடத்திவருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க