`ப்ளீஸ் என்னை புகழாதீங்க..!’ - பேரவையில் பணிவுகாட்டிய பன்னீர்செல்வம்

`ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடைமொழி வைத்துள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

panerselvam

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாம் நாளாக கூடியது. கேள்வி நேரத்தின்போது கலசப்பாக்கம் எம்.எல்.ஏ  ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். தி.மு.க உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம் ’அனைத்துப் பாராட்டுகளுக்கும் உரியவர் ஜெயலலிதா மட்டுமே. பேரவையில் உறுப்பினர்கள் யாரும் என்னைப் புகழ்ந்தும், பாராட்டியும் பேச வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் பேசிய அவர், `போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போதே தோல்வியில் முடிந்ததாக வாட்ஸ்அப் மூலம் செய்தியை பரப்பிவிட்டது தி.மு.க, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள்தான்’ என்று  குற்றம்சாட்டினார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள்மீது போலீஸ் தடியடி நடத்தியது. அதற்கு அப்போதைய முதல்வராக இருந்த பன்னீர்செல்வம்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!