வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (09/01/2018)

கடைசி தொடர்பு:12:09 (10/01/2018)

`என்னைப் பேசவிடவில்லை' - பேரவையில் தினகரனின் முதல் வெளிநடப்பு

''என் மீதான புகார்குறித்துப் பேச அனுமதியளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்தேன்'' என்று சுயேச்சை எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். இந்தநிலையில், பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தி.மு.க-வுடன் கூட்டணி என்று என்மீது குற்றம்சாட்டினர். என் மீதான குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்தனர். அமைச்சர் தங்கமணி, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து பேசியதற்கும் பதில் சொல்ல அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தேன்' என்று தெரிவித்தார்.