வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/01/2018)

`அதிகளவு அன்பு' - மனைவி இறந்த 4 மாதத்தில் உயிரை மாய்த்துக்காெண்ட கணவர்!

இராஜாஜி

மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன் (31) என்பவர் தன் மனைவி இறந்து 4 மாதங்கள் ஆகியும் அச்சோகத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேடு காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சிக்கந்தர் சாவடி பகுதியில் ஓட்டுநராகப் பணி புரிந்துவருகிறார். இவருக்கு கடந்த 2011-ல் மாரியம்மாள் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், மாரியம்மாளுக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் குழந்தை இல்லாத நிலையில் இருவரும் தங்களுக்குள் அதிக அளவு அன்பை பகிர்ந்துவந்துள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் நான்கு மாதத்துக்கு முன் வயிற்றில் உள்ள கட்டி பிரச்னை காரணமாக இறந்துபோனார்.

இந்தச் சோகத்தைத் தாங்கமுடியாமல் கிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்த கிருஷ்ணன் மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், சிகிச்சைக்குக் கொண்டுவரும் வழியிலேயே கிருஷ்ணன் இறந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது .