வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (09/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (09/01/2018)

தேசிய நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்த கட்டுமானத் தொழிலாளர்கள்!

சாலை மறியல்

திருச்சியை அடுத்த மணப்பாறையில் கட்டுமானத் தொழிலாளர்கள் மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி சாலை மறியல் செய்துவருவதால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் மணல் அள்ளுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த நொச்சிமேடு எனும் இடத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் காலை 9.20 மணி முதல் தொடர்ந்து போராட்டம் நீடிப்பதால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைமறியல்

இதனால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்ததால் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க