அரியலூர் டு திருச்சிக்கு சிறப்பு ரயில்! மக்களை மகிழவைத்த ரயில்வே

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தையடுத்து அரியலூர் - திருச்சி பயணிகள் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

            

    
தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

பயணிகள் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்தைத் தமிழக அரசு இயக்கினாலும் பல இடங்களில் உயிரிழப்புகளும் விபத்துகளும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தால் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய பயணிகள் தயங்குகின்றனர்.

 இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பயணிகளின் நலன்கருதி ரயில் வசதிகள் கொண்ட ஊர்களில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைகளை அடுத்து தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தின் சார்பில் இன்று முதல் அரியலூரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து அரியலூரிலிருந்து சிறப்பு ரயில்சேவை இன்றுதொடங்கியது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!