வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (09/01/2018)

கடைசி தொடர்பு:19:45 (09/01/2018)

'பேருந்து ஊழியர்கள் பிரச்னை புரியுது... எங்க பிரச்னையையும் எல்லாரும் புரிஞ்சுக்கங்க!'' - குமுறும் பெண்கள் #TNBusStrike

Bus Strike

ரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆறாவது நாளாகத் தொடர்கிறது. மற்ற நகரங்களில், ஊர்களில் தனியார் பேருந்துகள் உண்டு. ஆனால், அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பி வேலைக்குப் போகும் சென்னைப் பெண்களின் நிலைமை எப்படியிருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சங்கடங்கள் என்னென்ன? இதோ சில பெண்களின் மனக்குமுறல்கள்... 

'ஷேர் ஆட்டோ ரேட் இரண்டு மடங்கு அதிகமாயிடுச்சு!' - ஜெயந்தி, தனியார் நிறுவன ஊழியர் ஜெயந்தி

''பஸ் ஸ்டிரைக் ஆரம்பிச்சதிலிருந்து ஷேர் ஆட்டோவுலதான் ஆஃபீஸுக்குப் போயிட்டு வரேன். முன்னாடி, திருமங்கலம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கிறதுக்கும், ஷேர் ஆட்டோ வந்து நிற்கிறதுக்கும் தனித்தனியா பேரிகாடு வெச்சு பிரிச்சிருப்பாங்க. இப்போ பேரிகாடே இல்லே. ஷேர் ஆட்டோ மட்டும்தான் வந்து நிற்குது. அந்த அளவுக்கு பஸ் இனி வராதுன்னே முடிவு பண்ணிட்டாங்கபோல. நான் அம்பத்தூரிலிருந்து ஷேர் ஆட்டோவுல திருமங்கலம் வந்துட்டு, அங்கிருந்து ஸ்கைவாக் பகுதியில் வேலைக்குப் போக இன்னொரு ஷேர் ஆட்டோ பிடிப்பேன்.

முன்னாடி அம்பத்தூரிலிருந்து திருமங்கலத்துக்கு 20 ரூபாய். இப்போ 40 ரூபாய் கேட்கிறாங்க. திருமங்கலத்திலிருந்து ஸ்கை வாக் 10 ரூபாய்தான் ஷேர் ஆட்டோவுக்கு. இப்போ 20 ரூபாய் கேட்கிறாங்க. வேற வழியில்லாமல் அவ்வளவு பணம் கொடுத்துதான் போறேன். எப்பவாவது வரும் ஒரு பஸ்ஸில் ஜென்ட்ஸ் கூட்டம்தான் நிரம்பி வழியுது. அதுல முட்டி மோதி ஏற முடியலை. மெட்ரோ ரயில் லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஃபுட்போர்டு அடிக்கிறாங்க லேடீஸ். பார்க்கவே பயமா இருக்கு. இந்த ஸ்டிரைக் எப்பங்க சரியாகும்?'' 

ஜெனிஃபர்“பிடிச்ச இடங்களைக்கூட சுற்றிப் பார்க்க முடியலை” - ஜெனிஃபர், கல்லூரி மாணவி

“நாங்க எல்லாம் திருநெல்வேலி காலேஜில் படிக்கிறோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் லயோலா காலேஜ் ஈவென்ட்டுக்காக வந்தோம். இங்கே வர்றதுக்கு முன்னாடியே, சென்னையில் அந்த இடத்துக்குப் போகலாம், இந்த இடத்துக்குப் போகலாம்னு நிறைய பிளான் வெச்சிருந்தோம். செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல கெத்துக் காட்ட நினைச்சோம். ஆனா, ஸ்டிரைக் மொத்தத்தையும் காலி பண்ணிருச்சு.

திருநெல்வேலியிலிருந்து ஈஸியா சென்னைக்கு வந்துட்டோம். ஆனால், பிடிச்ச இடங்களை சுற்றிப் பார்க்க முடியலை. எப்படியாச்சும் மெரினா பீச்சுக்காவது போவோம்னு கேப் புக் பண்ண நினைச்சோம். ஆனால், லயோலா டூ மெரினாவுக்கு 350 கேக்கறாங்க. நாங்க மொத்தம் 15 பேர். 3 கேப் புக் பண்ணினா எவ்வளவு ஆகும். ஆத்தாடி நினைச்சாலே பயமா இருக்கு!'' - இது திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெனிஃபர் வாய்ஸ்.

ஹேண்ட்பேகைப் பிடுங்கறாங்களாம்! - சங்கவி, தனியார் ஊழியர். சங்கவி

''எங்க வில்லிவாக்கம் ஏரியாவுல ஷேர் ஆட்டோகூட கிடையாது. பஸ் ஸ்டிரைக் ஆரம்பிச்ச நாளிலிருந்து கசின் சிஸ்டர்தான் என்னை ஆஃபீஸ்ல டிராப் பண்ணிட்டிருக்காங்க. எனக்கு நைன் தர்ட்டிக்கே ஆஃபீஸ். எனக்காக அவங்களும் சீக்கிரமா கிளம்பி வர்றாங்க. என் நிலைமை பரவாயில்லை. என்னோடு வேலை பார்க்கும் ஒரு பொண்ணு தாம்பரத்திலிருந்து வர்றாங்க. அவங்க சொன்ன விஷயத்தைக் கேட்டு பயந்தே போயிட்டேன்.

பஸ் ஸ்டிரைக்னால டிரெய்னில் கூட்டம் நிரம்பி வழியுது. டிரெய்ன் நகரும்போது, பெண்கள் கம்பார்ட்மென்ட்ல தொங்கிட்டு வரும் பெண்களின் ஹேண்ட்பேக்கை நீளமான கொம்பு வெச்சு தட்டி இழுக்கிறது ஆங்காங்கே நடக்குதாம். பையுடன் சேர்ந்து ஆளும் தவறி விழுந்தா என்ன ஆகறது?''

 

அனிதா

டிரெய்னில் ஃபுட்போர்டு அடிக்க முடியுமா? அனிதா, தனியார் நிறுவன ஊழியர்

“நான் பழவந்தாங்கலிலிருந்து நுங்கம்பாக்கம் வரை டிரெயினில் வந்து, ஆபீஸுக்கு ஷேர் ஆட்டோவில் போவேன். நாலு நாளா பஸ் ஓடாததால் எல்லாமே பிரச்னை இருக்கு. முன்னைவிட டிரெய்னில் அதிக கூட்டம் வர்றதால், வீட்டிலிருந்து சீக்கிரமே கிளம்பினாலும் உடனடியா டிரெய்னைப் பிடிக்க முடியறதில்லை. டிரெய்னில் ஃபுட்போர்டு அடிக்க முடியுமா? ரெண்டு, மூணு டிரெய்னை விட்டுத்தான் அடுத்த டிரெய்னைப் பிடிக்க முடியுது.

அதேமாதிரி, நுங்கம்பாக்கம் வந்ததும் ஷேர் ஆட்டோவுக்கும் ஏகக் கிராக்கி. இதனால், ஆபீஸுக்கு லேட்டா போயிட்டிருக்கேன். லாஸ் ஆஃப் பே ஆகுது. என்னோடு வொர்க் பண்ற மூணு பொண்ணுங்க போரூரிலிருந்து வரமுடியாமல் லீவே போட்டுட்டாங்க. இதையெல்லாம் எங்கே போய் சொல்றது” எனக் கொதிக்கிறார் தனியார் நிறுவன ஊழியர் அனிதா.

 


டிரெண்டிங் @ விகடன்