Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`தலைமைச் செயலகத்தில் போலீஸாருக்கு அதிர்ச்சி' - அரசு ஊழியர்கள் அதிரடி பிளான் 

வணிகவரித்துறை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துவருகிறது. இதனால், வழக்கத்தைவிடக் கூடுதலான போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த சம்பவம் போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு வணிகவரித்துறையில் பல ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கும் சீனியாரிட்டியில் குளறுபடி இருந்துவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வணிகவரித்துறை சங்கங்கள் சார்பில் முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் உயரதிகாரிகளுக்கும் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துவரும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களின் கோரிக்கை மனுவைக் கொடுக்க வணிகவரித்துறை சங்கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்தது. கூட்டம் நடப்பதால் சட்டப்பேரவைக்குள் செல்ல புதிய யுக்தியை வணிகவரித்துறையினர் கையாண்டனர். ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தலைமைச் செயலகத்துக்குள் செல்ல அனுமதி பெற்றனர். போலீஸாருக்குத் தெரியாமல் 200-க்கும் மேற்பட்டவர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்தனர். பிறகு, அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஒன்றாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். 

கூட்டத்தைப் பார்த்த போலீஸார், உடனடியாக அவர்களிடம் விசாரித்தபோதுதான், முதல்வரை சந்திக்க கூட்டமாக வந்திருக்கும் தகவல் தெரியவந்தது. இது, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, முதல்வரைச் சந்திப்பது தொடர்பாக வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜனார்த்தனன், லட்சுமணன், ஜெயராஜராஜேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தமுறையாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்களின் பிரதான கோரிக்கையான சீனியாரிட்டி குளறுபடியை நீக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் வணிகவரித்துறையினர் உள்ளனர்.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement