மார்ச்சில் மாநாடு... ஆளுநருக்கு கண்டனம்! தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தி.மு.க. இளைஞரணி கூட்டம்

கூட்டத்தில், `தமிழர் திருநாளான பொங்கலன்று கிராமங்கள்தோறும் தி.மு.க கொடி நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும். பேரறிஞர் அண்ணா, தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடியவர்களுக்கு வாழ்த்து. நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடாமல் கமிஷன் பெறுவதிலும், ‘குதிரைபேர’ ஆளும் கட்சி ஆட்சியில் 85 லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை இந்த கூட்டத்திலேயே கொண்டு வரவேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் கோரும் சம்பள உயர்வுக்கும் அரசு கொடுக்க ஒப்புக்கொண்ட சதவிகிதத்துக்கும் வெறும் 0.13 சதவிகிதமே  வேறுபாடு உள்ளது. உடனடியாக போக்குவரத்துத் தொழிலாளர்களை அழைத்து முதல்வர் இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணவேண்டும். மாநில சுயாட்சி, சமூகநீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் மாநாடு நடத்தப்படும்.

ஸ்டாலின் தி.மு.க.மக்களாட்சி மாண்புகள் முற்றிலும் மீறப்பட்டு, அரசியல் சட்டத்தின்படி ஆற்ற வேண்டிய கடமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ‘ஆளுநர் ஆட்சி’ நடக்கிறதோ என கருதும் அளவுக்கு மாவட்ட ரீதியாக ஆய்வுகளை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கும் விரோதமாக நடைபெறும் ஆளுநர் ஆய்வை கண்டிக்கிறோம்' என தி.மு.க கூட்டத்தின் வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!