காவிரி விவகாரத்தில் போதுமான அளவு குழப்பம் ஏற்படுத்தியாச்சு- உச்சநீதிமன்றம் கருத்து

காவிரி விவகாரத்தில் நான்கு மாத காலத்துக்குள் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் குழம்பப் போவதில்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 

காவிரி நதி

பெங்களூரு நகர அரசியல் நடவடிக்கை குழுவின் தலைவர் கிரண்குமார் மஜூம்தார் என்பவர் தொடர்ந்த வழக்கில், ''தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்டால் ஹேமாவதி, ஹார்ங்கி, கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் தண்ணீர் குறைந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். பெங்களூரு நகருக்கான நீர் தேவை வருடத்துக்கு 19 டி.எம்.சி தண்ணீர். காவிரி நீர்ப்படுகை மாவட்டங்களையும் சேர்த்தால் மொத்தம் 26 டி.எம்.சி குடிநீருக்குக்கான தேவையாகும். எனவே, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், சந்திராசூட் அடங்கிய அமர்வு, 'காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் போதிய அளவுக்கு குழப்பங்கள் ஏற்படுத்தியாகிவிட்டது. இனி, நான்கு வாரத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்' என்று தெரிவித்தனர். 

காவிரி நீரை பங்கீடு செய்வதில் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதோடு, மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் தமிழகம் வலியுறுத்தியது. 2007–ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த இறுதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த மனு மீது மீதான விசாரணை முடியும் வரை, தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கர்நாடகா செவி சாய்க்கவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!