வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (10/01/2018)

கடைசி தொடர்பு:09:58 (10/01/2018)

தமிழகத்தில் மிதமான மழை..!

தமிழகம் முழுவதும் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்துள்ளது.  சென்னையில், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழைகுறித்து தெரிவித்த வானிலை மையம், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாள்களுக்கு பரவலாக மழை இருக்கும். தமிழகம் மற்றும் இலங்கை கடல் எல்லையில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மழை பொழிகிறது' என்று தெரிவித்துள்ளது.