வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (10/01/2018)

கடைசி தொடர்பு:10:21 (10/01/2018)

இன்று முதல் தொடங்குகிறது சென்னை புத்தகக் காட்சி..!

சென்னை புத்தகக் காட்சி இன்று முதல் தொடங்குகிறது. 41-வது ஆண்டாக இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. 

சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், இந்த புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. இன்று தொடங்கும் இந்தக் காட்சி, 22-ம் தேதி வரை நடைபெறும். புத்தகக் காட்சியில் பங்கேற்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 700-க்கும் அதிகமான அரங்குகளில், ஒரு கோடிக்கும் மேலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.