வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (10/01/2018)

கடைசி தொடர்பு:11:33 (10/01/2018)

பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறை திடீர் சோதனை..!

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலுள்ள ஜாய்ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 

தமிழகத்தில், கடந்த ஓர் ஆண்டாக வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்திவருகின்றனர். பெரும் தொழிலதிபர்கள் நிறுவனங்களிலும், அரசியல்வாதிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. தற்போது, சென்னை தியாகராய நகரிலுள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோல  கோவையிலும் ஜாய்ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரிச்சோதனை நடைபெற்றுவருகிறது.

 5 பேர்கொண்ட அதிகாரிகள் குழு, நகைக்கடையில் சோதனை நடத்திவருகிறனர். அதேபோன்று, நாகர்கோவில், தஞ்சாவூர், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். கடையில் பணிபுரியும் ஊழியர்கள், கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை.