வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:12:30 (10/01/2018)

மதுசூதனன் தோல்விக்கு இந்த மூன்று பேர்தான் காரணம்!- போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு அமைச்சர் ஜெயக்குமார்தான் காரணம் என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கடந்த திங்களன்று கூடியது. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் கடந்த இரு தினங்களாக பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவருகிறார். நேற்று, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அவர், பேச அனுமதியளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இந்தநிலையில், இன்று தாமதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். சட்டப்பேரவை வருவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரைதான் இரட்டை இலைக்கு மரியாதை இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனன் தோல்விக்கு காரணம். அ.தி.மு.கவில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது. விரைவில் ஒவ்வொன்றாக வெளியே வரும்' என்று தெரிவித்தார்.