வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (10/01/2018)

கடைசி தொடர்பு:12:51 (10/01/2018)

பொங்கலுக்கு முன் 750 கோடி ரூபாய் வழங்கப்படும்..! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

பொங்கலுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் மூன்றாவது நாள் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 110 விதியின் கீழ் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், 'பொதுமக்களின் நலன் கருதியே பேருந்து கட்டணம் குறைந்தவிலையில் உள்ளது. ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு, பொங்கலுக்கு முன்னதாக நிலுவைத் தொகை 750 கோடி ரூபாய் வழங்கப்படும். எனவே, போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்' என்று தெரிவித்தார்.