தமிழகத்தில் 5.86 கோடி வாக்காளர்கள்..! வரைவுப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

`தமிழகம் முழுவதும் 5.86 கோடி வாக்காளர்கள் உள்ளனர்' என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலுக்கான துணைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இந்தப் பட்டியலை வெளியிட்டனர். சென்னையில், இந்தப் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் வெளியிட்டார். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், மொத்தம் 38,01,919 பேர் உள்ளனர். அதில், ஆண்கள் 18,76,652 பேர் என்றும் பெண்கள் 19,24,366 பேர், திருநங்கைகள் 901 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் 31,51,171 வாக்காளர்களும் மதுரையில் 25,08,675 வாக்காளர்களும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5.86 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2.90 கோடி ஆண்களும் 2.96 கோடி பெண்களும் அடக்கம். 5.87 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!