வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (10/01/2018)

கடைசி தொடர்பு:14:58 (10/01/2018)

ஓகே... ஜேம்ஸ்... அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலையால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

ஒகி புயலை, அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலை 'ஓகே புயல்' என்று கூறியதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் நாள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துவருகிறார்கள். அ.தி.மு.க எம்.ஏல்.ஏ செம்மலை, ஒகி புயலை ஓகே புயல் என்றும் அதேபோல எம்.எல்.ஏ பிரின்ஸை ஜேம்ஸ் என்றும் கூறினார். அதனால், அவையில் அனைவரும் சிரித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் விடாமல் சிரித்தனர். 

இதே போன்று ப்ளூடிக் குறித்த கெள்விக்கு ப்ளூடூத் பற்றி பதிலளித்திருக்கிறார் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன். அமைச்சர் மணிகண்டனிடம் எம்.எல்.ஏ செம்மலை ட்விட்டரில் உள்ள ப்ளூடிக் அம்சம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ப்ளூடூத் பற்றி விளக்கமளித்துள்ளார் அமைச்சர் மணிகண்டன். இதையடுத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிரித்து கூச்சல் எழுப்பியுள்ளனர்.