வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (10/01/2018)

கடைசி தொடர்பு:15:45 (10/01/2018)

சென்னை ஹோட்டலில் பின்லாந்து பெண் மர்ம மரணம்..!

சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில், பின்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். 

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், பின்லாந்தைச் சேர்ந்த ஹூலியா நே எமிலியா என்ற பெண், அவரது நண்பருடன் சேர்ந்து நேற்று இரவு தங்கியுள்ளார். இன்று காலையில், அவர் உயிரிழந்துகிடந்தார். அதைப் பார்த்த ஹோட்டல் நிர்வாகிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பெண்ணுடன் வந்தவரைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர். அந்தப் பெண்ணின் உடல், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.