வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:45 (10/01/2018)

"வீடுதோறும் மாடித்தோட்டம் திட்டம்" தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மகளிர் திட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் "வீடுதோறும் வீட்டுத் தோட்டம் - மாடித் தோட்டம் இயக்கம்" தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் மாடித் தோட்டத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

Model Terrece garden in thoothukudi municipal corporation

"தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகளைத் தாங்களே இயற்கை முறையில் உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்கப்படும் திட்டம் செயல்படுத்துவதன் முதல் கட்டமாகத் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாதிரி மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

 
இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஸ், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களிடம் இத்திட்டத்தைக் கொண்டு செல்லும் விதமாக மாநகராட்சியின் மேற்கு மற்றும் தெற்கு மண்டல அலுவலகத்தில் புதிதாக மாதிரி மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ள மாதிரி தோட்டத்தை அலுவலக வேலை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். இத்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு உரப்பை, மண் புழு உரம், பஞ்ச காவ்யம், உரமாக்கப்பட்ட சாணம், சிரட்டை உள்ளிட்ட மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் தேவைக்கேற்ப குறைந்த விலையில்  வழங்கப்படும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்கப்படும் முறைகள், பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி பெற்ற மகளிர் குழுக்களால் பயிற்சி அளிக்கப்படும். 

Terrece garden in thoothukudi municipal corporation

இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊராட்சிப் பகுதிகளிலுள்ள வீடுகளிலும் மாதிரி தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 9,500 மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதரமும் மேம்படும்" என்றார். 

தொடர்ந்து முதல் கட்டமாக மாநகராட்சிப் பகுதியிலுள்ள 50 பெண்களுக்கு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க