`பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் பிரச்னை வந்திருக்காது' - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

"நம்பர் 1 ஆக இருந்த போக்குவரத்துக் கழகம் இப்படி ஆயிடுச்சு... போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தை அரசு விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

அவர் தொடர்ந்து பேசும்போது, "போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறி வருகிறார்கள். 13 சதவிகிதம் வித்தியாசம் உள்ளது. எனவே, இருதரப்பும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். போராட்டத்துக்கு உடனடியாக அரசு முடிவு கட்ட வேண்டும். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய பாமர மக்களும் மாணவர்களும்தாம். எனவே அரசு, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என நான் முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். உதிரிபாகங்கள், போக்குவரத்துக் கழகச் செலவினங்கள் உயரும்போது கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், அரசியலுக்காக ஆளும் அரசு, கட்டணத்தை ஏற்றவில்லை. ஆகையால்தான் இந்த நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நம்பர் 1 ஆக இருந்த தமிழகப் போக்குவரத்துக் கழகம், இன்று அடித்தளத்துக்குப் போய்விட்டது. பேருந்துகளும் மோசமாக உள்ளன. பேருந்துக் கட்டணத்தை நியாயமான முறையில் உயர்த்தி இருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது" என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!