ஆன்லைனில் நுழைவுச் சீட்டு! அசத்தும் வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா டிக்கெட் கவுண்ட்டர்

ஆசியாவின் மிகப் பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நுழைவுச் சீட்டுகள் மற்றும் பூங்காவின் இதர வசதிகளான மின்கல ஊர்தி, சிங்க, மான் உலாவிட ஊர்தி போன்ற வசதிகளை ஆன்லைன் மூலமாகப் பெறும் வசதி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இணையதளம் மூலம் இதைப் பயன்படுத்த விரும்புபவர்கள்  www.aazp , www.vandalurzoo.com ஆகிய முகவரிகளுக்குச் சென்று வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். அதில் பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை, நாள் ஆகியவற்றை பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் இமெயிலில் மூலமாக அவர்களுக்கு அனுப்பப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

இணையதளம் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் பொதுவழியில் காத்திருக்கத் தேவையில்லை. அவர்களுக்கென தனியாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரிசையில் காத்திருக்காமல் பூங்காவின் உள்ளே சென்றுவிடலாம். அவர்கள் வரும்போது பதிவு விவரங்கள் அடங்கிய ரசீது மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பொங்கல் விடுமுறையில் அதிக அளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் இந்த வசதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!